வெள்ளி, 08 மே, 2026
|
தினசரி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கை சந்தித்தார் சிறீலங்காவின் ஐ.நா தூதுவர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கை சந்தித்தார் சிறீலங்காவின் ஐ.நா தூதுவர்
அ.ரஜீவன்
அ.ரஜீவன்

ஏப்ரல் 17, 2026 · 1 நிமிட வாசிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்கா பிரதிநிதியும் தூதுவருமான சுமித் தஸநாயக்க, ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க் குடன் (Volker Türk) அண்மையில் (13ஆம் திகதி) ஆக்கபூர்வமான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

ஜெனீவாவில் உள்ள பாலே வில்சன்' (Palais Wilson) கட்டிடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, சிறீலங்காவின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து தூதுவர் தஸநாயக்க உயர் ஆணையாளருக்கு விளக்கமளித்ததுடன், இருதரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார் என ஜெனவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர தூதரகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) ஆகியவற்றுடன் சிறீலங்கா தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கும் என்பதை தூதுவர் தஸநாயக்க இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்த உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், சிறீலங்காவின் விளக்கங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் ஊடாக தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.